வெப்பத்தில் பாதிக்கும் தேயிலை பாதுகாக்க ‘மல்ச்சிங்’ பணி தீவிரம்
வெப்பத்தில் பாதிக்கும் தேயிலை பாதுகாக்க ‘மல்ச்சிங்’ பணி தீவிரம்
ADDED : செப் 29, 2026 01:41 PM
பந்தலுார்: கோடை வெப்பத்தில் இருந்து தேயிலை நாற்றுகளை காப்பாற்ற புற்களை கொண்டு ‘மல்ச்சிங்’ பணி நடந்து வருகிறது.
பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், தேயிலை மற்றும் காபி நாற்றுகளை நடவு செய்தனர். ஆனால். வெப்பம் அதிகரித்து வருவதால், நாற்றுகள் கருகி காய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதனை பாதுகாக்க தற்போது புற்களை கொண்டு ‘மல்ச்சிங்’ பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயி விஜயகுமார் கூறுகையில், ‘‘ இப்பணியால், கோடை வெப்பத்தால் மண்ணில் உள்ள ஈரப்பதம் வேகமாக ஆவியாகி, செடிகளின் வேர் மண்டலம் சூடாகி, நாற்றுகள் வாடும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மேலும், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்கள் தக்க வைக்கும் வகையில், மேற்பரப்பில், உலர்ந்த புற்கள் பரப்பி வைக்கப்படுகிறது. இதினால், அவ்வப்போது தலைகாட்டும் மழையில், மண்ணின் ஈரப்பதம் வெப்பத்தில் வீணாகாமல் பாதுகாக்கப்படும்,’’என்றார்.
