ADDED : செப் 17, 2026 03:41 PM
பாலக்காடு: பட்டாம்பியில், நண்பர்களுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது, தண்டவாளத்தை கடந்தவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், கொளத்தூர், குறும்பலம் இறச்சேரி பள்ளியாலில் பகுதியை சேர்ந்தவர் ஜாபர், 49. இவர், நண்பர்களுடன் தஞ்சாவூரில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பட்டாம்பியிலிருந்து திருச்சூர் சென்று, அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல பட்டாம்பி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக அனைவரும் தண்டவாளத்தை கடந்தனர். அனைவரும் தண்டவாளத்தை கடந்து, நடைமேடைக்கு சென்ற நிலையில், தண்டவாளத்தை கடக்க முயன்ற ஜாபர், அந்த தண்டவாளத்தில் வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
