/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கட்டாயம் :பயிற்சி வகுப்பில் அறிவுரை
/
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கட்டாயம் :பயிற்சி வகுப்பில் அறிவுரை
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கட்டாயம் :பயிற்சி வகுப்பில் அறிவுரை
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கட்டாயம் :பயிற்சி வகுப்பில் அறிவுரை
ADDED : மார் 05, 2024 11:29 PM
குன்னுார்;''மின் பணியாளர்கள் கையுறை அணிவதுடன், 'எர்த் ராடு' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வைத்து பணியாற்ற வேண்டும்,'' என, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சேகர் பேசினார்.
குன்னுார் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட மின்பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு விவேக் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த செயற்பொறியாளர் சேகர் பேசுகையில், ''தற்போது சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள புதிய துணை மின் நிலையத்தின் மூலம் பூமிக்கடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் மின் பாதிப்புகள் ஏற்படாது. மின்கம்பங்களில் ஏறும்போது, கையுறை அணிவதுடன், 'எர்த்ராடு' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வைத்து பணியாற்ற வேண்டும்,'' என்றார்.
முன்னிலை வகித்த உதவி செயற்பொறியாளர் (பொ) ஜான்சன் பேசுகையில்,''புதிய மின் பாதைக்காக அமைக்கப்பட்ட புதிய மின் கம்பங்கள் குறித்த விபரங்களை பணியாளர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கம்பங்களில் ஏறி பணியாற்றும் போது மொபைல் போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதேபோல மது அருந்தி பணியாற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் மவுண்ட் பிளன்ட், சிம்ஸ் பார்க், பேரக்ஸ், எடப்பள்ளி மின் பொறியாளர்கள் பல்வேறு பயிற்சிகள் அளித்தனர்.
அதில், மின் பாதையாளர்கள், முகவர்கள், கேங்மேன் உட்பட மின் பணியாளர்கள் பங்கேற்றனர்.

