sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மஞ்சூர் வழித்தட பஸ் பிரச்னை நாள்தோறும் பயணிகள் கடும் அவதி

/

 மஞ்சூர் வழித்தட பஸ் பிரச்னை நாள்தோறும் பயணிகள் கடும் அவதி

 மஞ்சூர் வழித்தட பஸ் பிரச்னை நாள்தோறும் பயணிகள் கடும் அவதி

 மஞ்சூர் வழித்தட பஸ் பிரச்னை நாள்தோறும் பயணிகள் கடும் அவதி


ADDED : மார் 05, 2026 05:23 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர்: மஞ்சூர் வழித்தடத்தில் சரிவர அரசு பஸ் இயங்காததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மஞ்சூர் வழித்தட சுற்றுவட்டார மக்கள் பல்வேறு தேவைகளுக்கு ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை முதல் ஊட்டியிலிருந்து மஞ்சூர் , மேல்குந்தா , கிண்ணக் கொரை உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்த பஸ்களை வேறு வழித்தடத்தில் இயக்கியுள்ளனர்.

மஞ்சூர் வழித்தடத்தில் பயணிகள் ஆங்காங்கே பல மணி நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் சிரமத்திற்கு இடையே பஸ் ஏறி சென்றனர். ஊட்டி கிளை இரண்டுக்கு பயணிகள் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் போக்குவரத்து கழகம் சரிவர நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

பயணிகள் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழித்தடங்களில் பஸ் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us