/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் மனுநீதி மக்கள் மன்றம் கலெக்டரிடம் மனு

ADDED : நவ 21, 2024 09:01 PM
மஞ்சூர்;'மஞ்சூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலன் கருதி கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்,' என, மனுநீதி மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்ட மனு நீதி மக்கள் மன்றத்தின் நிறுவனர் சதீஷ் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
குந்தா தாலுகாவின் தலைமை இடமான மஞ்சூரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் , 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், பொதுமக்கள் தங்களது பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் பெரும்பாலான நோயாளிகள், தொலைதுாரம் உள்ள ஊட்டி, குன்னுார் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே , நோயாளிகளின் நலன் கருதி மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான 'எக்ஸ்ரே, ஸ்கேன்' மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.