/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்
மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்
மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்
UPDATED : ஏப் 24, 2025 11:47 PM
ADDED : ஏப் 24, 2025 11:07 PM

கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு உபயதாரர்கள் மூலம், சிறப்பு அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது.
விழாவின் ஒரு பகுதியாக, நேற்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு, அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி, காம்பாய்கடை, பஸ் நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம் மற்றும் ராம்சந்த் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.