/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மெக்ஐவரின் 149வது நினைவு தினம் அனுசரிப்பு
/
மெக்ஐவரின் 149வது நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூன் 09, 2025 12:47 AM

ஊட்டி; ஊட்டியில், 176 ஆண்டு பழமையான அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய, வில்லியம் கிரஹம் மெக் ஐவரின், 149 வது நினைவு தினம் தோட்டக்கலை துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. ஊட்டி புனித ஸ்டீபன் சர்ச் கல்லறையில், கலெக்டர் லட்சுமி பவ்யா, மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
மெக்ஐவர், தனது 25ம் வயது முதல் 19 ஆண்டுகளாக அயராது உழைத்து ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். கடந்த, 1848ம் ஆண்டு தாவரவியல் பூங்கா அமைவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
மேலும், பல நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, பல்வேறு வகையான அரிதான மரங்கள் நடவு செய்யப்பட்டு, 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர், 1876, ஜூன் 8ம் தேதி காலமானார். அவருடைய நினைவு நாள் நேற்று தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.