/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் 'பிளாஸ்டிக்' கழிவு வீசுவதை தடுக்க நடவடிக்கை; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : டிச 26, 2024 10:06 PM

கூடலுார்; நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், நீலகிரிக்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகள், தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து வந்து, கோழிக்கோடு சாலை ஓரங்களில் அமர்ந்து, உணவை உட்கொண்டு, பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள், தட்டுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை சாலையோர வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
அதில், கூடலுார் இரும்புபாலம் அருகே, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றை ஒட்டிய பகுதிகளில், குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்று நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 'தினமலர்'நாளிதழ் செய்தி எதிரொலியாக, நெல்லியாளம் நகராட்சி ஊழியர்கள் அவைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து உணவு உண்பதையும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்க, நெல்லியாளம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் தடுப்பு வலை அமைத்துள்ளனர்.
இதனை வரவேற்றுள்ள மக்கள், 'இதேபோன்று மற்ற பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.