ADDED : டிச 06, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கர் கல்யாண மண்டபத்தில், 'மெடி எக்ஸ்போ' மருத்துவ முகாம் நாளை (8ம் தேதி) நடக்கிறது.
அதில், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை, புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் ருமேஷ் சந்தர் வழங்குகிறார்.
மேலும், தலசீமியா, சிக்கில் செல் அனீமியா நோய்களின் அறிகுறிகள், குணப்படுத்தும் மருத்துவம் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம். மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், 7339333485 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.