/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் வணிகர் சங்க பெயர் பலகை

ADDED : மார் 20, 2024 01:24 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் அரசுக்கு சொந்தமான, 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் அனாதீனம் என்ற கணக்கில் உள்ளது.
இதனை பலரும் கையகப்படுத்தி குடியிருப்புகள் கட்டியும் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அதில், சாலை ஓரத்தில் உள்ள, 10 சென்ட் காலி இடம், சுகாதார துறைக்கு வழங்கி தற்போது, 45 லட்ச ரூபாய் செலவு, துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு பணி துவக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த இடம் வணிகர் சங்கத்திற்கு சொந்தமானது என்று கூறி, வணிகர்கள் சங்கம் சார்பில் இதே பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் கட்டுமான பணி குறித்த அரசு அறிவிப்பு பலவையும், மறுபக்கம் வணிகர் சங்கங்களின் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளதால், நிலம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் துணை சுகாதார நிலையம் கட்டுவதில், தொய்வு ஏற்பட்டு உள்ளது.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் வந்தால் பயன் ஏற்படும். இதனால், வருவாய் துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து, இந்த நிலத்தில் உள்ள சர்ச்சைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.