/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரம்; நடைமுறை சிக்கல்கள் குறித்து வியாபாரிகள் புகார்
/
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரம்; நடைமுறை சிக்கல்கள் குறித்து வியாபாரிகள் புகார்
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரம்; நடைமுறை சிக்கல்கள் குறித்து வியாபாரிகள் புகார்
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரம்; நடைமுறை சிக்கல்கள் குறித்து வியாபாரிகள் புகார்
ADDED : பிப் 17, 2025 10:22 PM

குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டு மான பணிகள் நடக்க உள்ள நிலையில், உழவர் சந்தை அருகே தற்காலிக கடைகள் அமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து வியாபாரிகள், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள, 800 க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து, நகராட்சியின் பொது நிதி மற்றும் அரசின் நிதியில், 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்க்கிங் வசதியுடன் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று கடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதலில் கடை கட்டுவதற்காக, தீயணைப்பு நிலையத்தை இடம் மாற்றினால் ஏற்படும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, இங்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்கு, உயர் அதிகாரிகள் தடை விதித்தனர்.
தொடர்ந்து, இந்து அறநிலையத்துறையின் பழைய கணேஷ் தியேட்டர் வளாக பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க கோரி, அனுமதி கடிதத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி உள்ளார். மேலும், உழவர் சந்தை பகுதியில் உள்ள, 2 ஏக்கர் வளாகம் தேர்வு செய்யப்பட்டு தற்போது கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அதிகாரிகளுடன் மார்க்கெட் கடைகள் மற்றும் உழவர் சந்தை அருகே தற்காலிக கடைகள் அமைக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வியாபாரிகள் கடைகளை மாற்றுவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து தெரிவித்தனர்.
அதில், 'உழவர் சந்தை பகுதிக்கு கடைகள் மாற்றினால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். மேலும், இப்பகுதிகளில் சிறிய கடைகள் அமைப்பதை தவிர்த்து, பெரிய கடைகள் கட்டி தர வேண்டும்,' என்றனர்.
அப்போது பேசிய கலெக்டர், 'வியாபாரிகளுடன் நல்ல முறையில் ஆலோசனை நடத்தி, திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; இந்து அறநிலையத்துறையின் அனுமதிக்குப் பிறகு அப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும்,' என்றார்.

