ADDED : அக் 16, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார், இந்து வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அண்ணா சிலை அருகில் வணிகர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்து வியாபாரிகள் நல சங்க மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மார்க்கெட் வியாபாரி பாலன் பங்கேற்று குத்து விளக்கேற்றினார்.
‘வ.உ.சி., சுதேசி கப்பல் நிறுவிய நாளை, இந்து வியாபாரிகளும் கொண்டாட வேண்டிய நாள்’ என,தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் பங்கேற்றனர். மூர்த்தி நன்றி கூறினார்.
