/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விரிவான புதிய மினி பஸ் இயக்கம்; அமைச்சர் துவக்கி வைத்தார்
/
விரிவான புதிய மினி பஸ் இயக்கம்; அமைச்சர் துவக்கி வைத்தார்
விரிவான புதிய மினி பஸ் இயக்கம்; அமைச்சர் துவக்கி வைத்தார்
விரிவான புதிய மினி பஸ் இயக்கம்; அமைச்சர் துவக்கி வைத்தார்
ADDED : ஜூன் 17, 2025 09:17 PM

கோத்தகிரி; கோத்தகிரியில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது,
மினி பஸ் திட்டம் மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. தஞ்சையில், முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் துவக்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில் இத்திட்டத்திற்கு மொத்தம், 27 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோத்தகிரியில் ஐந்து வழித் தடங்களுக்கு, மினிபஸ்கள் இயக்கம் துவக்கப்பட்டது. படிப்படியாக, இதர வழித்தடங்களுக்கு விரைவில் பஸ்கள் இயக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் மினி பஸ் இயக்க நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இதுவரை, 16 கி.மீ., தொலைவுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது, 25 கி.மீ., வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலை பகுதியில் குறுகலான சாலையில் பெரிய பஸ்கள் இயக்குவதில் சிக்கல் இருப்பதால், மினிபஸ் இத்திட்டம், மக்கள் மத்தியில் நிச்சயமாக வரவேற்பை பெற உள்ளது. '' என்றார். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, குன்னூர் சப் - கலெக்டர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.