/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தவறவிட்ட ரூ. 21 ஆயிரம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி
/
தவறவிட்ட ரூ. 21 ஆயிரம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி
தவறவிட்ட ரூ. 21 ஆயிரம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி
தவறவிட்ட ரூ. 21 ஆயிரம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி
ADDED : நவ 07, 2024 08:07 PM
பந்தலுார்; பந்தலுார் பஜாரில் உள்ள ஒரு பேன்சி கடையில், நேற்று முன்தினம், சந்திரா என்பவர் கூட்டுறவு வங்கியில் இருந்த எடுக்கப்பட்ட, 21,650 ரூபாய் பணம் இருந்து பர்சை மறந்து விட்டு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது பர்ஸ் காணாத நிலையில், சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.
நேற்று போலீசார் கடையில் வந்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, சேரங்கோடு 'டான்டீ' தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளி ஞானசுந்தரி என்பவர் அங்கு வந்து, பர்சை கொடுத்துள்ளார்.
வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப், போலீசார் முன்னிலையில், சந்திராவிடம் பணத்தை ஒப்படைத்தார். ஞானசுந்தரிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
--