/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை வரத்து இருந்தும் 'மைட்ஸ்' நோய் தாக்கம்; சிறு விவசாயிகள் கவலை
/
தேயிலை வரத்து இருந்தும் 'மைட்ஸ்' நோய் தாக்கம்; சிறு விவசாயிகள் கவலை
தேயிலை வரத்து இருந்தும் 'மைட்ஸ்' நோய் தாக்கம்; சிறு விவசாயிகள் கவலை
தேயிலை வரத்து இருந்தும் 'மைட்ஸ்' நோய் தாக்கம்; சிறு விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 01, 2025 09:54 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் ஒரு பக்கம் பசுந்தேயிலை வரத்து உயர்ந்தும், 'மைட்ஸ்' நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில், தண்ணீர் ஆதாரம் உள்ள விலை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி செய்தாலும், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இத்தொழிலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நம்பி உள்ளனர்.
சமீப காலமாக, ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யப்பட்டு, கான்கிரீட் கட்டடங்கள் பெருகியுள்ளது.
இதனால், தேயிலை தோட்டங்களின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வார நிலவரம் படி, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 20 முதல், 23 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. தொழிலாளர்களின் கூலி உயர்வுடன், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களுக்கு விலை உயர்ந்துள்ளதால், இந்த விலையை வைத்து, குடும்பங்களை நகர்த்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
வழக்கத்துக்கு மாறாக, மார்ச் மாதம் சில நாட்கள், மழை பெய்த நிலையில், அரும்புகள் துளிர்விட்டு, தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வந்தாலும், மறுபக்கம் பெரும்பாலான தோட்டங்களில், 'மைட்ஸ்' எனப்படும் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி, இலைகள் உதிர்ந்து வருகிறது.
இனிவரும் நாட்களில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

