/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன கண்காணிப்பு விபரங்களை பதிவு செய்ய 'மொபைல் போன்'
/
வன கண்காணிப்பு விபரங்களை பதிவு செய்ய 'மொபைல் போன்'
வன கண்காணிப்பு விபரங்களை பதிவு செய்ய 'மொபைல் போன்'
வன கண்காணிப்பு விபரங்களை பதிவு செய்ய 'மொபைல் போன்'
ADDED : நவ 30, 2024 04:59 AM

கூடலுார் : கூடலுார் வனக்கோட்டத்தில், வன கண்காணிப்பு குறித்து விபரங்களை பதிவு செய்ய, வன ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'மொபைல்' போன்களின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியின் போது கிடைக்கும் விவரங்களை 'மொபைல்' போனில் பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோன்று, கூடலுார் வன கோட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனக்காப்பாளர்களுக்கு, கண்காணிப்பு பணிகளை பதிவு செய்யும் வகையில், தனி 'சாப்ட்வேருடன்' கூடிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம், கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் நடந்தது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து, கண்காணிப்பு பணியின் போது மொபைல் போன்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, உயிரியலாளர்கள் சந்தோஷ், பழனிச்சாமி ஆகியோர் கண்காணிப்பு பணியின் போது மொபைல் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
முகாமில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ் சுரேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர்.

