/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் கண்காணிப்பு பணிக்கு நவீன 'டிரோன்'
/
போலீஸ் கண்காணிப்பு பணிக்கு நவீன 'டிரோன்'
ADDED : ஜன 24, 2025 09:49 PM

ஊட்டி, ; ஊட்டி போலீசாருக்கு தனியார் அமைப்பினர். 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிரோன் வழங்கினர்.
நீலகிரி மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியின் போது, டிரோன் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், முக்கிய சுற்றுலா மையங்கள்; வனப்பகுதிகளில் டிரோன் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மாவட்ட எஸ்.பி., நிஷா நிருபர்களிடம் கூறுகையில்,''நீலகிரி மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியின் போது பயன்படுத்தும் வகையில், தனியார் அமைப்பு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிரோன் வழங்கியது.
இந்த அதிநவீன டிரோன் பேரிடர் தடுப்பு நடவடிக்கை; மனித--விலங்கு மோதல்; நக்சல் தடுப்பு; கோடை சீசன் நேரங்களில் வாகன நெரிசல் மற்றும் சுற்றுா பயணிகள் கூட்டம் ஆகியவற்றை கண்காணிக்க உதவியாக இருக்கும்,''என்றார்.

