/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் இன்று தேரோட்டம்
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் இன்று தேரோட்டம்
ADDED : ஜன 23, 2024 11:41 PM
அன்னூர்:மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று (24ம் தேதி) நடக்கிறது.
அன்னூர் அருகே மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில், 57ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 20ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 21ம் தேதி இரவு கருட வாகனத்திலும், பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உலா வந்து அருள்பாலித்தார்.
கடந்த 22ம் தேதி காலை அம்மன் அழைத்தாலும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இரவு புஷ்பக விமானத்தில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு, பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. முக்கிய பிரமுகர்கள், அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
நாளை (25ம் தேதி) இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 26ம் தேதி இரவு சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 27ம் தேதி கொடி இறக்குதலும், மஞ்சள் நீராட்டுதலும் மகா தீபாராதனையுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.

