தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குரங்கு கடித்து காயமடைந்தவர் நிவாரண உதவியின்றி அவதி

குரங்கு கடித்து காயமடைந்தவர் நிவாரண உதவியின்றி அவதி

குரங்கு கடித்து காயமடைந்தவர் நிவாரண உதவியின்றி அவதி


ADDED : செப் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில், கருங்குரங்கு கடித்து காயமடைந்து சிகிச்சை பெறும் நபருக்கு வனத்துறை நிவாரண உதவி வழங்க வேண்டும்.

பந்தலுார் அருகே பிதர்காடு ஓடோடம்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்,50. இவர் கடந்த, 20-ம் தேதி, வீட்டிலிருந்தே வெளியே வந்து தனது பைக்கில் ஏறி, பிதர்காடு பஜாருக்கு சென்றுள்ளார். அப்போது பைக்கில் பின்னால் ஓடி வந்த கருங்குரங்கு, பரமசிவத்தின் காலில் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் குரங்கை விரட்டி, அவரை மீட்டு வயநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பின்னர், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதுவரை, 78 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டு நிலையில், தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். இதுவரை வனத்துறை நிவாரணமும் கிடைக்கவில்லை.

பிதர்காடு வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்கும் வகையில், கூடலுார் வன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,’’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us