/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் பரவும் குரங்கு அம்மை நோய்; நீலகிரி மருத்துவ துறை 'அலர்ட்'
/
கேரளாவில் பரவும் குரங்கு அம்மை நோய்; நீலகிரி மருத்துவ துறை 'அலர்ட்'
கேரளாவில் பரவும் குரங்கு அம்மை நோய்; நீலகிரி மருத்துவ துறை 'அலர்ட்'
கேரளாவில் பரவும் குரங்கு அம்மை நோய்; நீலகிரி மருத்துவ துறை 'அலர்ட்'
ADDED : நவ 05, 2024 08:54 PM
ஊட்டி ; 'குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் வெகுவாக பரவி வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயின் அறிகுறிகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நோயின் பொதுவான அறிகுறிகள், காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் முகத்தில் தொடங்கி,கை,கால் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும். கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் மற்றும் இருமல், கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சு திணறல் ஏற்படும்.
நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றவை இருந்தால் அவர்கள், அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொதுவான அறிகுறி உள்ளவர்கள்.
உங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நோய்வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

