/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு 'சேட்டை'
/
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு 'சேட்டை'
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு 'சேட்டை'
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு 'சேட்டை'
ADDED : நவ 18, 2024 09:27 PM

ஊட்டி; 'ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து, வனத்தில் விட வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கிராம பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. தவிர, வாரந்தோறும் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் துறை ரீதியான கூட்டம் நடக்கிறது.
பொதுமக்களும் தினமும் பல்வேறு தேவைகளுக்கு வருகின்றனர். இங்கு சமீப காலமாக குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சில நேரங்களில் ஊழியர்கள் பணிபுரியும் அறைக்கு முன்பாக சென்று தொல்லை கொடுக்கின்றன. எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விடுவிக்க வேண்டும்.