/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூரில் கூட்டமாக சுற்றும் குரங்குகள்; பிடித்து வனத்தில் விட கலெக்டரிடம் மனு

ADDED : நவ 04, 2024 09:49 PM

மஞ்சூர்; 'மஞ்சூர் பகுதியில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மனுநீதி மக்கள் மன்ற தலைவர், சதீஷ்குமார் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், மக்களின் தேவைக்காக மலை காய்கறிகள் வீடுகளை சுற்றியுள்ள விளைநிலங்கள் மற்றும் தேயிலை தோட்டம் நடுவே ஊடுபயிராகவும் பயிரிடுகின்றனர்.
கிராமங்கள் தோறும் கூட்டம், கூட்டமாக படையெடுக்கும் குரங்குகள் மலை காய்கறி பயிர்களை சேதப்படுத்துவதால் மலை காய்கறி பயிரிடுவதையும் தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தவிர, வீடுகள், வணிக நிறுவனங்களில் புகுந்து பொருட்களை லாவகமாக துாக்கி சென்று விடுகிறது. குந்தா தாலுகா அலுவலகத்திற்கு படையெடுக்கும் குரங்குகள் அங்கு பல்வேறு தேவைக்கு வரும் பொதுமக்களின் கார்களை முற்றுகையிட்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
குரங்கு தொல்லையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.