/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலை நேர கரன்சி பஸ் டிரிப் 'கட்'; உள்ளூர் மக்கள் பாதிப்பு
/
காலை நேர கரன்சி பஸ் டிரிப் 'கட்'; உள்ளூர் மக்கள் பாதிப்பு
காலை நேர கரன்சி பஸ் டிரிப் 'கட்'; உள்ளூர் மக்கள் பாதிப்பு
காலை நேர கரன்சி பஸ் டிரிப் 'கட்'; உள்ளூர் மக்கள் பாதிப்பு
ADDED : பிப் 07, 2024 10:38 PM
குன்னுார் : 'குன்னுார் கரன்சி வழித்தடத்தில் காலை நேரத்தில் பஸ் இயக்கவில்லை,' என, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குன்னுார்- கரன்சி இடையே காலை நேரத்தில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குன்னுாரில் இருந்து காலை, 6:45 மணிக்கு கரன்சிக்கு புறப்பட வேண்டிய அரசு பஸ் இயக்குவதில்லை.
இதனால், இப்பகுதிக்கு தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும், வெளியூர் சென்று இரவு நேரத்தில் வரும் பயணிகளும் சிரமப்படுகின்றனர்.
பயணிகள் கூறுகையில், 'குனனுார் கரன்சி வழித்தடத்தில் காலை, 6:45 மணிக்கு இயக்கும் பஸ் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படுவதில்லை. இந்த பஸ் தாமதமாக சிங்காராவுக்கு இயக்கப்படுகிறது. சில நேரங்களில் கூட்டம் மிகுந்த மாற்று வழித்தடத்தில் இந்த பஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கரன்சி வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும்,'' என்றனர்.