/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடையூறின்றி மின் கம்பங்கள்: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
இடையூறின்றி மின் கம்பங்கள்: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
இடையூறின்றி மின் கம்பங்கள்: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
இடையூறின்றி மின் கம்பங்கள்: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 08:50 PM

பந்தலூர்: சேரங்கோடு - -கொளப்பள்ளி சாலையில் எவ்வித இடையூறின்றி மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு, சின்கோனா வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், டான் டீ தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் செல்லும், இந்த சாலையில் தற்போது தனியார் மினி பஸ்கள் சென்று வருகிறது.
அத்துடன் பசுந்தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்வாரியம் சார்பில், அந்த பகுதியில் மின்சப்ளை வழங்குவதற்காக மின்கம்பங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
மின் கம்பங்கள் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் சாலையை விரிவுபடுத்தினாலோ, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
மின் கம்பங்களை சாலையில் இருந்து பாதுகாப்பான முறையில், நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். என, இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத் தியுள்ளனர்.

