/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்ரோஷத்தில் காட்டு யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
/
ஆக்ரோஷத்தில் காட்டு யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
ADDED : நவ 04, 2025 08:49 PM

கூடலூர்: கூடலூர் சாலையில் ஆக்ரோஷமாக வந்த காட்டு யானையால் மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
கூடலூர், தேவர்சோலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. பகல் நேரங்களில், வனப்பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதனை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தேவர்சோலை நகரை ஒட்டிய பஞ்சாயத்து காலனியில் நேற்று முன்தினம், இரவு 7:15 மணிக்கு காட்டு யானை நுழைந்ததால், அச்சமடைந்த மக்கள் சத்தமிட்டு விரட்டினர்.
அங்கிருந்து, தேவர்சோலை சாலைக்கு ஆக்ரோஷமாக வந்த யானை, அவ்வழியாக சென்ற வாகனங்களை விரட்டியது. ஓட்டுனர்கள், வாகனங்களை விரைவாக இயக்கி தப்பினர். தொடர்ந்து, தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப் பகுதிக்கு சென்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

