/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை பணியில் மந்தம்! நாள்தோறும் வாகன போக்குவரத்தில் சிரமம்
/
மலை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை பணியில் மந்தம்! நாள்தோறும் வாகன போக்குவரத்தில் சிரமம்
மலை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை பணியில் மந்தம்! நாள்தோறும் வாகன போக்குவரத்தில் சிரமம்
மலை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை பணியில் மந்தம்! நாள்தோறும் வாகன போக்குவரத்தில் சிரமம்
ADDED : அக் 14, 2024 09:19 PM

குன்னுார் : குன்னுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டு வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.
குன்னுார் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் கல்லார் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த, 2022--23ம் ஆண்டில் மேட்டுப்பாளையம், -குன்னுார், -ஊட்டி பாதையில் சாலையோர சரிவுகளை வெட்டி, விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அதிகாரிகள் துவக்கினர். இதன்படி, 'மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 35 கோடி ரூபாய்; குன்னுாரில் இருந்து ஊட்டி வரை, 14 கி.மீ., வரை, 27 கோடி ரூபாய்,' என, தனியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
அதில், அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்- குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில் குரும்பாடி, பர்லியார் பகுதிகளில் மந்தமாக நடந்து வரும் பணியால், அரசு பஸ்கள் உட்பட வாகனங்கள் மணி கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தொடரும் விபத்துகள்
உதாரணமாக, ஜூன், 2ம் தேதி, பாய்ஸ் கம்பெனி கோபாலபுரம் பகுதியில் பைக், கார் மீது மோதிய விபத்தில் மாணவர் பலியானார்; கடந்த மாதம், 22ம் தேதி பாய்ஸ் கம்பெனி அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்குகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.கடந்த, 10ம் தேதி சாலையோரத்தில் நிறுத்தியிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்தார்.
இத்தகைய முக்கிய சாலையில் பல இடங்களிலும் சிறு குழிகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. அருவங்காடு பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்கள் மழைக்கு அடித்து சென்று மிக பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வெலிங்டனில் தடுப்புச்சுவர் எழுப்பாததால் வீடுகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது மட்டுமின்றி சாலையோரம் தோண்டப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் விபத்து ஏற்படுகிறது. சி.டி.சி., காலனி பகுதியில் வளைவு பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்துவதால், கனரக வாகனங்கள் விபத்து அதிகரித்துள்ளது. எனவே, சாலை பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.