/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்
/
மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்
ADDED : அக் 15, 2024 09:55 PM
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னுார் பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையை தொடர்ந்து, கடும் மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலைபாதையில் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது.
கொட்டும் மழையில், 'ஹைவே பேட்ரோல்' போலீசார், குரும்பாடி நெடுஞ்சாலை விரிவாக்க இடத்தில் இருபுறமும் வந்த வாகனங்களை நிறுத்தி அனுமதித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,'மலை பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்த கூடாது. வளைவுகளில் முந்துவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோர் சருக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களை குறைந்த வேகத்தில், முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.