/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் தாமதம்; சுற்றுலா பயணியர் சிரமம்
/
மலை ரயில் தாமதம்; சுற்றுலா பயணியர் சிரமம்
ADDED : ஆக 16, 2025 10:29 PM
குன்னூர்; நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை,7:10 மணிக்கு, 4 பெட்டிகளுடன், மலை ரயில் புறப்படும். காலை 10:10 மணியளவில் குன்னூர் வந்தடைந்த பின்,
கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, காலை 10:40 மணிக்கு ஊட்டிக்கு புறப்படும். நேற்று சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்த புளூ மவுன்டன் எக்ஸ்பிரஸ் தாமதமானதால், மேட்டுப்பாளையத்திலிருந்து , 8:15 மணியளவில் புறப்பட்டது. குன்னுாருக்கு காலை 11:20 மணிக்கு வந்து சேர்ந்தது. 240 சுற்றுலா பயணிகளுடன், காலை 11:35 மணிக்கு ஊட்டிக்கு சென்றது. கால தாமதத்தால் சுற்றுலா பயணியர் சிரமப்பட்டனர் . சுதந்திர தினம், கோகுலாஷ்டமி என, தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.