/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பொறுப்பேற்பு
/
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : அக் 25, 2024 09:42 PM
கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தின் புதிய கள இயக்குனராக ஐ.எப்.எஸ். அதிகாரி கிருபாசங்கர் பொறுப்பேற்றார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனராக வெங்கடேஷ் பணியாற்றி வந்தார். இவர், அரசு தேயிலை கோட்டம் (டான்டீ) மேலாண்மை இயக்குனர்; கோவை வன செயல் திட்ட வன பாதுகாவலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் இவர் முதுமலை கள இயக்குனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவருக்கு மாற்றாக, மாநில அரசின் ரப்பர் கழக இயக்குனராக பணியாற்றி வந்த கிருபாசங்கர் முதுமலை கள இயக்குனராகவும், கூடுதலாக டான்டீ மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவர், நேற்று முதுமலை கள இயக்குனராக பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு வனத்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.