/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

ADDED : ஆக 10, 2025 09:24 PM

குன்னுார்; அருவங்காடு, ஒசட்டி பள்ளம் பாறை முனீஸ்வரர் கோவிலில், 48 வது ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்னுார் அருவங்காடு அருகே, ஒசட்டி பள்ளம் காரிமாரன் லைன் பகுதியில் அமைந்துள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில், 48வது ஆண்டு திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் அலங்கார உச்சி பூஜை ஆகியவை நடந்தன.
முக்கிய திருவிழாவில் நேற்று காலை, 8:00 மணிக்கு, அருவங்காடு ஜெகதளா சாலை ஹெத்தையம்மன் கோவிலில் கும்பம் அலங்கரித்து திருவீதி உலா நடந்தது.
அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு, கலைமகள் தெரு, அருவங்காடு மெயின் கேட், பாய்ஸ் கம்பெனி வழியாக பாறை முனீஸ்வரர் கோவில் அடைந்தது.
இதில், பக்தர்கள் அலகு பூட்டுதல் நிகழ்ச்சியில், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவிலில் அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது. விழாவின் ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.