/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கோமா' நிலையில் நகராட்சி நிர்வாகம்: கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
'கோமா' நிலையில் நகராட்சி நிர்வாகம்: கூட்டத்தில் குற்றச்சாட்டு
'கோமா' நிலையில் நகராட்சி நிர்வாகம்: கூட்டத்தில் குற்றச்சாட்டு
'கோமா' நிலையில் நகராட்சி நிர்வாகம்: கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 29, 2025 10:51 PM
கூடலுார்; கூடலுார் நகர மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் சுவீதாஸ்ரீ முன்னிலை வகித்தார்.
ராஜேந்திரன்: கடந்த, 10 மாதமாக வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை. நகராட்சி கோமாவில் உள்ளது. எந்த வேலையும் நடப்பதில்லை. வளர்ச்சி பணிகள் ஒதுக்குவதில் தலைவர் பாகுபாடு காட்டுகிறார். பொதுநிலையில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் ஒதுக்க வேண்டும் என்றார்.
தலைவர்: அனைத்து வார்டுகளுக்கும் பாகுபாடு இன்றி பணிகள் ஒதுக்கப்பட்டுகிறது. இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெண்ணிலா: நகராட்சியில், 2.3 கோடி ரூபாய் நிதியில் அவசர பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதில், முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். குப்பை கிடங்கில் சமீபத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் மின் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.
இரண்டு வாரத்துக்கு முன் தீ ஏற்பட்டுள்ளது. இத்தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். கூடலுாரில் மே, ஜூன் மாதத்தில் லாரியில் தண்ணீர் சப்ளை செய்ய, 9.8 லட்சம் ரூபாய் பில் போட்டு எடுத்துள்ளனர். இது குறித்து விளக்க வேண்டும் என்ற போது, கவுன்சிலர்களுக்கு தலைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
உஸ்மான்: புகார் தொடர்பாக அதிகாரிகள் முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். வாட்டர் ஏ.டி.எம்., பராமரிப்புக்கு, 7 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இது குறித்து முறையான கணக்கு தெரிவிக்க வேண்டும்.
இதனிடையே, 'தங்கள் வார்டுகளில், 'வளர்ச்சிப் பணிகளில் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,' என கூறி, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கவுசல்யா, சகுந்தலா, ஆபிதா ஆகியோர், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ய முயன்றனர்.
தலைவர்: வளர்ச்சி பணி ஒதுக்குவதில் பாகுபாடு பார்ப்பதில்லை. அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சி பணிகள் வழங்கப்படும்,'என்றார்.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.