பஜாரில் சுற்றிய மாடுகள் பிடித்த நகராட்சி ஊழியர்கள்
பஜாரில் சுற்றிய மாடுகள் பிடித்த நகராட்சி ஊழியர்கள்
ADDED : செப் 25, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி, ஊழியர்கள் பிடித்து அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
பந்தலுார் பஜார் பகுதியில் அதிகளவு கால்நடைகள் சுற்றி திரிகின்றன. பகல் நேரங்களில் கடைகள் முன்பாகவும், சாலைகளிலும் உலா வருகின்றன. இதனால், வியாபாரிகள்,வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்த புகாரை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் சசிகுமார் உத்தரவுபடி நகராட்சி பணியாளர்கள், மாடுகளை நகராட்சி அலுவலக வளாகத்துக்கு பிடித்து சென்றனர். அங்கு, 10 மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
