ADDED : செப் 25, 2026 06:00 PM
கோத்தகிரி: நீலகிரி மாவட்ட தொழில் மையம் வாயிலாக, 59 பயனாளிகள், 1.69 கோடி ரூபாய் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க, தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
அதன்படி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், ‘மூன்று பேருக்கு, 8.1 லட்சம்; இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், ஒன்பது பேருக்கு, 5.93 லட்சம்; அம்பேத்கார் தொழில் முனைவோர் திட்டத்தில், 41 பேருக்கு, 1.50 கோடி ரூபாய்,’ மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தவிர, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், ‘ஆறு பேருக்கு, 4.62 லட்சம்; சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், 2026-–27ம் ஆண்டில், மொத்தம், 59 பயனாளிகளுக்கு, 1.69 கோடி ரூபாய்,’ மானியம் வழங்கப்பட்டுள்ளது.
