/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆர்வமிருந்தால் வருமானம் பெருகும்
/
காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆர்வமிருந்தால் வருமானம் பெருகும்
காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆர்வமிருந்தால் வருமானம் பெருகும்
காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆர்வமிருந்தால் வருமானம் பெருகும்
ADDED : நவ 14, 2025 09:05 PM
ஊட்டி: ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பழங்குடியின விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஊட்டியில் இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ், 'சுகாதாரமும் நலனும்' என்ற தலைப்பில் பழங்குடியின மக்களுக்கிடையே வருமானம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது .
மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மையத் தலைவர் விஞ்ஞானி சோமசுந்தரம் ஜெயராமன் பேசுகையில், ''காளான் வளர்ப்பு ஒரு நிலையான தொழில்முறை முயற்சியாக வருமானத்தை அதிகரிப்பதோடு, மனித ஊட்டச்சத்தையும் மேம்படுத்துகிறது. காளான் கழிவு உயிர் உரமாக பயன்பட்டு பயிர் உற்பத்தி மற்றும் மண் ஆரோக்கியத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது,''என்றார்.
விஞ்ஞானி சுதீர்குமார் பேசுகையில், '' நீலகிரியில் வளர்க்க கூடிய பல்வேறு வகை காளான்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட காளான் கழிவுகளை மீண்டும் மட்க வைத்து உயிர் உரமாக மாற்றுவதன் வாயிலாக, தாவரங்களுக்கு சிறந்த உரமாவது மட்டுமின்றி, மண் துகள்களை ஒன்றிணைத்து மண் அரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது,'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தேன்மொழி, ஊட்டிவேளாண் அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுனர் திவ்யா, ஊட்டியில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய நிர்வாகி பிரவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

