தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பெயர் பலகை திறப்பு விழா; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

பெயர் பலகை திறப்பு விழா; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

பெயர் பலகை திறப்பு விழா; ஹிந்து முன்னணி எதிர்ப்பு


ADDED : பிப் 28, 2024 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே உருமாண்டம் பாளையத்தில் இ.கம்யூ., கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, ஹிந்து முன்னணியின் எதிர்பால் ரத்து செய்யப்பட்டது.

துடியலுார் அருகே உருமாண்டபாளையத்தில், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வரும், உருமாண்டம்பாளையம் சாஸ்திரி வீதி குழந்தைகள் நல மையத்தில், 2022ம் ஆண்டு மேற்கூரை மற்றும் முகப்பு பகுதி ஆபத்தான நிலையில் இருந்தது. இதை கோவை மாநகராட்சி, 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல், ஒத்துழைப்புடன் பழுது நீக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, இ.கம்யூ., கட்சியின் மறைந்த நல்லசாமி நினைவாக அவரது பெயரிட்ட பலகை, மைய கட்டடத்தின் முன் கூரையில் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கான விழா நேற்று மாலை 5.00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுருந்தது.

இதற்கு, கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோட்ட செயலாளர் பாலன், எஸ்.எஸ்.குளம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, பெயர் பலகை திறந்து வைக்கும் விழா ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us