sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை: வரும் 9ல் முகாம்

/

 தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை: வரும் 9ல் முகாம்

 தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை: வரும் 9ல் முகாம்

 தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை: வரும் 9ல் முகாம்


ADDED : பிப் 07, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: தேசிய தொழிற் பழகுனர் திட்டத்தின் கீழ், மாநில அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், மாவட்ட அளவில் தொழில் பழகுனர்களுக்கான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம், குன்னுார் அரசு பாலிடெக்னிக்கில் நடக்கிறது.

வரும், 9ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

இதில், தேர்வு பெற்றால் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் வழங்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது, தொழில் பழகுனர்களுக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப, 7,700 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.தேர்ச்சி பெற்ற அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடையலாம். மேலும், தகவலுக்கு, 908079 6827; 9787848360 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டரின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us