UPDATED : நவ 27, 2026 07:08 PM
ADDED : நவ 27, 2026 07:06 PM
கோத்தகிரி: நெடுகுளா, தேனாடு நுாலகங்களில், 59வது தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், மாவட்ட நுாலக அலுவலர் கிளமன்ட் தலைமை வகித்தார். ஓய்வூதிய சங்க செயலாளர் திப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார், ஊர் பிரமுகர்கள் மாதன், குமார், சந்திரன உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் புதிய புரவலர்களுக்கு பட்டயம் வழங்கப்பட்டன. நுாலகர் ரமேஷ் நன்றி கூறினார்.
* தேனாடு நுாலகத்திலும் நடந்த தேசிய நுாலக வார விழாவில் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அர்ஜுணன், ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். விழாவில், 30 பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். ஏற்பாடுகளை நுாலகர் குமரன் செய்திருந்தார்.
