/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய மலையேற்ற பயிற்சி; என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
/
தேசிய மலையேற்ற பயிற்சி; என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
தேசிய மலையேற்ற பயிற்சி; என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
தேசிய மலையேற்ற பயிற்சி; என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
ADDED : மே 09, 2025 05:50 AM

குன்னுார்; நீலகிரி மாவட்டதில் துவங்கிய தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாமில், 108 பேர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேசிய அளவிலான என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாம், முத்தொரை பாலாடாவில் உள்ள ஏகலைவா ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில், துவங்கி நடந்து வருகிறது. 108 மாணவியர் பங்கேற்ற குழுவின் மலையேற்றத்தை, கோவை மாவட்ட குழு கமாண்டர் கர்னல் ராமநாதன் துவக்கி வைத்தார்.
இந்த குழுவினர், ஊட்டி கேர்ன்ஹில் பைன்பாரஸ்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மலை வேற்ற பயிற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த குழுவினர், குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம், ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட உள்ளனர்.