தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேசிய அறிவியல் தினம்: அசத்திய பழங்குடி மாணவர்கள்

தேசிய அறிவியல் தினம்: அசத்திய பழங்குடி மாணவர்கள்

தேசிய அறிவியல் தினம்: அசத்திய பழங்குடி மாணவர்கள்


ADDED : பிப் 28, 2024 09:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 09:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார் : தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகம் வரவேற்றார். பழங்குடியின மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதில், மனித வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் முக்கிய இடம் பிடிக்கும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகள் இருந்தாலும், அவற்றை வெளி கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேசிய அறிவியல் தினத்தில் அத்தகைய முயற்சியை மேற்கொண்டு, பழங்குடியின மாணவர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர இது உந்துசக்தியாக இருக்கும்,'' என்றார்.

தொடர்ந்து, காற்றாலை மின்சாரம் தயாரிப்பது குறித்து, உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் தயாரித்து விளக்கம் அளித்த விதம், அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, அறிவியல் சார்ந்த புவி வெப்பமயமாதல், நவீன தொழில்நுட்பம், 2018 முதல் 2024 புதிய கண்டுபிடிப்புகள் குறித்த பேச்சு போட்டி நடந்தது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பேச்சு போட்டிகளில், பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள் பூபதி, பால்விக்டர், பள்ளியின் அறிவியல் ஆசிரியர் அனிதா மேரி, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளியின் கணித ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us