/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கையாக விளையும் காட்டு மாங்காய்: பறிப்பதற்கு எதிர்ப்பு
/
இயற்கையாக விளையும் காட்டு மாங்காய்: பறிப்பதற்கு எதிர்ப்பு
இயற்கையாக விளையும் காட்டு மாங்காய்: பறிப்பதற்கு எதிர்ப்பு
இயற்கையாக விளையும் காட்டு மாங்காய்: பறிப்பதற்கு எதிர்ப்பு
ADDED : மார் 24, 2025 10:39 PM

கூடலுார்; கூடலுார் டான்டீ தேயிலை தோட்டங்களில், இயற்கையாக விளையும் மாமரங்களில், ஒப்பந்த முறையில் பிஞ்சு மாங்காய் பறிக்க, வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலுார், பந்தலுார் வனப்பகுதிகள் காட்டு மாங்காய் மரங்கள், இயற்கையாகவே வளர்ந்துள்ளன. சீசன் காலங்களில் இதில், காய்க்கும் காய்கள், பறவைகள், குரங்குகள், யானை உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. ஆனால், சிலர் இதில் விளையும் பிஞ்சு மாங்காயை பறித்து, ஊறுகாய்க்காக கேரளாவுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது, காட்டு மாங்காய் பூ பூத்து, காய் விட துவங்கியுள்ளது. சிலர், அதனை பறித்து ஊறுகாய்க்காக வெளி இடங்களுக்கு அனுப்ப துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், கூடலுார் டான்டீ தேயிலை தோட்டங்களில் இயற்கையாக முளைத்துள்ள, காட்டு மாங்காய் மரங்களில், விளைந்துள்ள பிஞ்சு மாங்காய், ஒப்பந்த முறையில் பறித்து எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீசன் காலங்களில் பறவைகள், குரங்குகள் உணவாக பயன்படும் காட்டு மாங்காய், முதிர்ச்சி யடையும் முன் ஒப்பந்த முறையில் பறிக்க அனுமதி வழங்கியதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டான்டீ அதிகாரிகள் கூறுகையில், 'டான்டீ பகுதியில், சில இடங்களில் காணப்படும், மரங்களில் விளைந்துள்ள, மாங்காய் ஒப்பந்த முறையில் பறிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த பாதிப்பும் இல்லை,' என்றனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் காட்டு மாங்காய் மரங்கள் இயற்கையாக விளைந்துள்ளது. டான்டீ விளைந்துள்ள, பிஞ்சு மாங்காயை ஒப்பந்த முறையில் பறிக்க அனுமதி வழங்கியுள்ளனர். முதிர்ந்த மாங்காய், பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவாக பயன்படும் என்பதை கருத்தில் கொண்டு, டான்டீ நிர்வாகம் காட்டு மாங்காய் மரங்களில், பிஞ்சு காய்களை பறிப்பதை கைவிட வேண்டும்,' என்றனர்.