/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நஞ்சநாடு பள்ளியில் என்.சி.சி., முகாம்
/
நஞ்சநாடு பள்ளியில் என்.சி.சி., முகாம்
ADDED : அக் 22, 2025 10:17 PM
ஊட்டி: நஞ்சநாடு பள்ளியில் நடந்த என்.சி.சி., முகாமில் மாணவர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர்.
ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி சார்பில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக்கின் தீமை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தூய்மை பணி முகாம் நடந்தது.
பள்ளியின் என்.சி.சி., முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் பங்கேற்ற, 50 என்.சி.சி., மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர். காலியிடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
பள்ளி வளாகத்தில் இருந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து அப்புறப்படுத்தினர். சுற்றுப்புற தூய்மை, இயற்கை பாதுகாப்பு, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் சரவணன், சசி, மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.