UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 10:00 PM

கோத்தகிரி:
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இங்கு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த வாரம் பெய்த மழையால், பூங்கா பசுமைக்கு திரும்பியுள்ளது. இங்கு, பட்டுப்போன மலர் நாற்றுகள் அகற்றப்பட்டு, புல்தரை நேர்த்தியாக வெட்டப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், வார விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகளுடன், உள்ளூர் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பது வழக்கம்.
இந்நிலையில், இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் குறைக்கப்பட்ட நிலையில், பூங்காவை பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொலிவிழந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, இதமான காலநிலையிலும், பூங்காவில் பார்வையாளர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வெறிச்சேடி காணப்படுகிறது. எனவே, நகராட்சி மற்றும் தோட்டக்கலை துறையினர், இங்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.
