/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நேபாள பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
/
நேபாள பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூலை 24, 2025 08:12 PM
ஊட்டி; ஊட்டியில் திருமணமான, 4 மாதத்தில் நேபாள நாட்டை சேர்ந்த இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
நேபாள நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக ஊட்டிக்கு வந்தார். மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றார்.
நேபாள நாட்டை சேர்ந்த நிர்மலா, 22, என்பவரை ராஜேந்திரன் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ஊட்டியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தனர். இரு நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் நிர்மலா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு தலைமை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில்,'தம்பதியர் இடையே பிரச்னை இருந்ததாக தெரியவில்லை. திருமணமாகி நான்கு மாதத்தில் சம்பவம் நடந்திருப்பதால் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் முழு விவரம் தெரிய வரும். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது,' என்றனர்.