/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவர மையத்தில் நடக்கும் மேம்பாட்டு பணியில் புதிய மூலிகை தோட்டம்! 150 வகை அரிய மூலிகை செடிகளை வளர்க்க திட்டம்

ADDED : ஆக 08, 2025 08:32 PM

கூடலுார்; கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் முதன் முறையாக, 150 வகை அரிய செடிகளுடன், புதிய மூலிகை தோட்டம் அமைக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு, தங்கும் விடுதிகள், செமினார் ஹால், காட்சி கோபுரம் மேம்படுத்துதல், சுற்றுலா பயணிகள் தொங்கியபடி சாகச சுற்றுலா செல்லும் வகையில், கடந்த ஆண்டு, 'ஜிப் லைன்' உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய மூலிகை தோட்டம் இந்நிலையில், கூடலுார் பகுதியில் உள்ள பல்வேறு அரிய மூலிகை செடிகள் குறித்து சுற்றுலா பயணிகள், தாவரவியல் படிக்கும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இம்மையத்தில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை வனத்துறையினர் துவக்கி உள்ளனர்.
அதில், 'கல்லுருக்கி, அக்ரகாரம், காட்டு குறுமிளகு, காட்டு மஞ்சள், அரத்தை,' உள்ளிட், 150 அரிய வகை மூலிகை செடிகளை நடவு செய்து வருகின்றனர். மேலும், பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை செடிகளை கண்டறிந்து, அவர்களின் ஒத்துழைப்புடன் நடவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆய்வுக்கு பயன்படும் கூடலுார் வன அலுவலர் வெங்டேஷ் பிரபு கூறுகையில்,''கூடலுார் பகுதியி ல் இயற்கையாகவே ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இதில், பல செடிகளை பழங்குடியினர் மருத்துவ சிகிச்சைக்கு கூட பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் மூலிகை செடிகளை அழிவில் இருந்து காக்கவும், உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செடிகள் குறித்து சுற்றுலா பயணிகள், தாவரவியல் ஆய்வு மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், புதிய மூலிகை தோட்டம் உருவாகி வருகிறது,'' என்றார்.