/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய ரகங்கள் ஆய்வுக்காக நடவு
/
கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய ரகங்கள் ஆய்வுக்காக நடவு
கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய ரகங்கள் ஆய்வுக்காக நடவு
கூடலுார் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய ரகங்கள் ஆய்வுக்காக நடவு
ADDED : ஆக 28, 2025 10:36 PM

கூடலுார், ; கூடலுார் புளியாம்பாறையில் உள்ள, கோவை வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் புதிய ரக நெல் நாற்றுகள் ஆய்வுக்காக நடவு செய்யும் பணி நடந்தது.
கூடலுார் புளியாம்பாறையில், கோவை வேளாண் பல்கலைக்கழக, ஒட்டுநெல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் ஒரு பகுதியான, ஆடுதுறை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் புதிய ரக நெல் கண்டுபிடிப்புகளை நடவு செய்து ஆய்வு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணி, மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயப்பிரகாஷ் மேற்பார்வையில் துவங்கியது. மையத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மகேந்திரன், சியாம், குன்னுார் ஆராய்ச்சி மையத்தில் நெமடாலஜி (புழுக்கள் குறித்து ஆய்வு) பெர்லின் முன்னிலையில் நெல் நாற்றுகள் நடவு செய்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் உள்ள இப்பகுதியின் காலநிலை, புதிய வகை நெல் ஆராய்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. அதன் அடிப்படையில், ஆராய்ச்சியில் உள்ள, நெல் ரகங்களின் நாற்றுகளை, நடவு செய்து, விதை நெல் எடுத்து, தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நடப்பாண்டு, ஆராய்ச்சியில் உள்ள புதிய ரக நெல் நாற்றுகள், ஆய்வுக்காக நடவு செய்துள்ளோம்,'என்றனர்.

