ADDED : செப் 18, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட மருத்துவத்துறை, நடமாடும் புலம்பெயர்வோர் பரிசோதனை குழு மற்றும் நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரவு நேர ரத்த பரிசோதனை முகாமை நடத்தின.
ஓரியண்டல் எஸ்டேட் அங்கன்வாடி மையக் கட்டடத்தில், இரவு 9:00 மணிக்கு நடந்த முகாமில், மேற்கு வங்கத்தை சேர்ந்த, 50 தொழிலாளர்களுக்கு மலேரியா மற்றும் யானைக்கால் நோய் கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தொற்று கண்டறிதலுக்கான ரத்த மாதிரிகளை சேகரித்தனர். முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
