ADDED : செப் 18, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிஜித் பஹான், 21. இவர், கடந்த ஒரு ஆண்டாக கேரளாவில் தங்கி பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, பாலக்காடு செர்ப்புளச்சேரி சளவறை பகுதியில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். செர்ப்புளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
