/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூணாறில் காலம் தவறி காய்க்கும் ஆப்பிள்கள்
/
மூணாறில் காலம் தவறி காய்க்கும் ஆப்பிள்கள்
ADDED : ஆக 03, 2011 10:43 PM
மூணாறு : மூணாறு அருகே காந்தலூரில் நிலவும் கால நிலை மாற்றத்தால், காலம் தவறி ஆப்பிள் பழங்கள் காய்க்கின்றன.
காந்தலூர் பகுதியில் பழ வகைகள் சாகுபடி அதிகமாக நடக்கிறது. இங்கு கிடைக்கும் பழங்கள், தமிழகத்திற்கு அதிகளவில் அனுப்பிவைக்கப்படுகின்றன. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காந்தலூர் பகுதியில் நிலவும் காலநிலை, ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால் பலர் ஆப்பிள் சாகுபடி செய்துள்ளனர். ஆண்டு தோறும் ஆப்பிள் மரங்கள் மார்ச்சில் பூக்க துவங்கி, ஜூலை இறுதியில் சீசன் நிறைவடையும். இவ்வாண்டு நிலவும் காலநிலை மாற்றத்தால், காலதாமதமாக, மே மாதத்தில் தான் ஆப்பிள் மரங்கள் பூக்கத் தொடங்கின. ஆப்பிள் பழம் சீசன் முடியும் தருவாயில், தற்போது காலம் தவறி பழங்கள் காய்த்து வருகின்றன.