/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னூரில் கொடி அணிவகுப்பு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
/
ஊட்டி, குன்னூரில் கொடி அணிவகுப்பு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
ஊட்டி, குன்னூரில் கொடி அணிவகுப்பு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
ஊட்டி, குன்னூரில் கொடி அணிவகுப்பு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
ADDED : செப் 02, 2011 11:22 PM
ஊட்டி : ஊட்டியில் மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 441 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளன. இன்றும், 4ம் தேதியும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடப்பதால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நேற்று மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. கொடி அணி வகுப்பில் 1 ஏ.டி.எஸ்.பி., 8 டி.எஸ்.பி.,க்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 143 எஸ்.ஐ.,க்கள், 400 போலீசார் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த 150 பேர் என மொத்தம் 1685 போலீசார் கொடி அணி வகுப்பில் கலந்துகொண்டனர். கொடி அணிவகுப்பு கார்டன் சாலையில் துவங்கி ஊட்டியின் முக்கிய விதிகளின் வழியாக சென்று ஏ.டி.சி.,யின் முடிந்தது.
குன்னூர்: குன்னூர் நகரில் பஸ் ஸ்டாண்டு தீயணைப்பு நிலையம், பெட்போர்டு, கன்னிமாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட இடங்களிலும், வெலிங்டன், அருவங்காடு, கொலக்கம்பை பகுதிகளில் 38 சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி நேற்று குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்டு வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.