sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கன்டோன்மென்ட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

/

கன்டோன்மென்ட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

கன்டோன்மென்ட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

கன்டோன்மென்ட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு


ADDED : ஆக 28, 2011 01:10 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : கன்டோன்மென்ட் நிர்வாகத்தை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் எல்லைக்குட்பட்ட நல்லப்பன் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:நல்லப்பன் தெருவில் உள்ள எனது மாமனாருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆறு ஆண்டாக வசித்து வருகிறேன்.

இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெற, கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரியிடம் தடையில்லா சான்று வழங்க மனு செய்து, அவர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கன்டோன்மென்ட் நியமன உறுப்பினரும், குன்னூர் ஆர்.டி.ஓ.,வுமான காந்திமதிக்கு மனு வழங்கினேன். விசாரணை நடத்திய அவர், பிள்ளைகளின் படிப்புக்காக, வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்து, கன்டோன்மென்ட் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பினார். பரிந்துரையை ஏற்காத கன்டோன்மென்ட் செயல் அலுவலர், தடையில்லா சான்று வழங்க மறுத்து வருகிறார். வரும் 29ம் தேதி காலை 9.00 மணி முதல் வெலிங்டன் கன்டோன்மென்ட் அலுவலகம் முன்புள்ள பூங்காவில் தொடர் உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன். இவ்வாறு, ஆறுமுகம் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us